Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் சொதப்பும் சூர்யகுமார் யாதவ்… பயிற்சியாளர் டிராவிட் சொல்லும் கருத்து!

சூர்யகுமார் யாதவ்
Webdunia
புதன், 22 மார்ச் 2023 (14:58 IST)
ஆஸி அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரலாறு காணாத அளவுக்கு சொதப்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அதே போல அடுத்த கேப்டன் என எதிர்பார்க்கப்படும் ஹர்திக் பாண்ட்யாவும் சொதப்பி வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் இருவரின் இடத்தையும் மாற்றி விளையாட வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில் “ சூர்யகுமார் டி20யில் கூட அந்த இரண்டு பந்துகளில் அவுட் ஆகி இருப்பார். ஒருநாள் போட்டி என்பதால் மட்டும் அவர் அவுட் ஆகவில்லை. ஸ்டார்க் வீசியது  உயர்தர பந்துவீச்சு.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் பற்றி பேசியுள்ள பயிற்சியாளர் டிராவிட் “சூர்யகுமார் அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை. மிகவும் கடினமான டி 20 போட்டிகளிலேயே அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். அதனால் ஒருநாள் போட்டிகளில் அவரை இன்னும் சில போட்டிகள் விளையாட வைத்து நாம் காத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments