Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலக கோப்பை: விராட் கோலி அரைசதம் அடித்து புதிய சாதனை !

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (15:03 IST)
இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் அடித்து, ஆட்டமிழந்துள்ளார்.
 

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில், தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா(27 ரன்கள் ), ராகுல் ( 5 ரன்கள் அவுட்டாகிவிடவே, அடுத்து வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதர் இணைந்து விளையாடினர், இதில், கோலி 40 பந்துகளுக்கு 50 ரன் கள் அடித்து அவுட்டானார்.

ஏற்கனவே, டி-20 உலகக் கோப்பையில் அதிக ரன் கள் அடித்த வீரர்களின் பட்டியலில், விராட் கோலி முதலிடத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் அடித்த ரன்களுடன் சேர்த்து, டி-20 கிரிக்கெட் விராட் கோலி மொத்தம் 4000 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ALSO READ: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் அடித்த வீரர்களில் கோலி முதலிடம்!
 

தற்போது ஹர்த்திக் பாண்டியா 53 ரன்களுடனும், ரிஷப் பாண்ட் 6 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments