உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக பாகிஷ்தான் அணி விளையாடியது.
இந்நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன் பின்னர் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. எனவே பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.