Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனது இடத்தை தக்கவைக்குமா டெல்லி? – நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்!

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (12:28 IST)
அரபு அமீரகத்தில் இன்று முதலாவதாக டெல்லி கேப்பிட்டல்ஸுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் போட்டி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் முதலாவது சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் விருவிருப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல 10 போட்டிகள் விளையாடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முதலாவது சுற்றின்போது இரண்டு அணிகளும் மோதிக் கொண்டபோது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆரம்பத்தில் சுமாராகவே கல்கத்தா அணி விளையாடி இருந்தாலும் சமீபத்திய ஆட்டங்களில் சிறப்பாக விளையாடின. ஆனால் முன்னதாக ஆர்சிபி ஆட்டத்தில் 84 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் கல்கத்தா வென்றால் 3வது இடத்திற்கும், டெல்லி வென்றால் முதலிடத்திற்கும் முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments