திக்குமுக்காடும் பிஎஸ்என்எல்: ஒரே மாதத்தில் 40 லட்சமா?

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:57 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நுழைந்தது முதல் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். மேலும், தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள சலுகைகலை வழங்கி வருகின்றன. 
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவன சேவையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இணைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 
 
இதில் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக அளவு பிஎஸ்என்எல் சேவையை ஏன் தேர்வு செய்துள்ளனர் என்றும் காரணம் வெளியிடப்பட்டுள்ளது. 
ஆம், புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். இடையில் ஏர்செல் சேவை முடங்கியதாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்தனர்.
 
மேலும், டெலிகாம் சூழலுக்கு ஏற்ப கவர்ச்சிகர சலுகைகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments