Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அள்ளித்தரும் அமேசான்; இந்தியாவில் மேலும் 4500 கோடி முதலீடு!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (11:57 IST)
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேலும் 4500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்படும் ஆன்லைன் விற்பனை தளங்களில் முக்கியமான ஒன்று அமேசான். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமேசான் பல்வேறு தள்ளுபடிகளை அளித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

சமீபத்தில் விழாக்கால விற்பனையை துவங்கிய அமேசான் அதன்மூலம் பெரும் வருவாயை ஈட்டியுள்ளது. ஆன்லைன் விற்பனையில் மட்டுமல்லாமல் உணவு விற்பனை, டிக்கெட் முன்பதிவு என மேலும் பல சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பங்குசந்தை தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு வருவதால் மேற்படி 4500 கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது அமேசான்.

இந்த 4500 கோடி முதலீடு என்பது அமேசான் உணவுக்காக தனியாக தொடங்கப்போவதாக கூறப்படும் புதிய செயலிக்கான முதலீடாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

துருக்கியுடன் ஒப்பந்தத்தை முறித்த மும்பை ஐஐடி - பரபரப்பு தகவல்!

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments