Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதய நோயகளுக்கான கடல் உணவு இதோ...

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (18:00 IST)
நண்டு சுவை மிகுந்த உணவாக இருப்பதுடன், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் அதிக அளவில் கொண்டுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு முறை நண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு உண்பதால் ஏற்படும் நன்மகளை பற்றி காண்போம்....
 
1. நண்டு இறைச்சியில் கலோரிகள் மிக மிகக் குறைவு. 100 கிராம் நண்டு இறைச்சியில் 1.5 கிராம் அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்களின் கடல் உணவு தேர்வில் நண்டு சிறந்த தேர்வாக உள்ளது. 
 
2. நண்டு இறைச்சி வைட்டமின் ஏ உள்ளதால், கண்பார்வை அதிகரிக்கிறது. மேலும், கண் புரை மற்றும் கருவிழி சிதைவு போன்றவற்றை தடுப்பதில் சிறந்த பலன் தருகிறது.
 
3. நண்டு இறைச்சியில் செலெனியம் அதிக அளவில் காணப்படுகிறது. செலெனியம், தைராய்டு சுரப்பிகளின் சேதங்களை தடுப்பதன் மூலம், அவற்றின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. 
 
4. இதய நோயாளிகள் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் அளவில் கவனமாக இருப்பது அவசியம். இத்தகைய இதய நோயாளிகளுக்கு நண்டு இறைச்சி நல்ல ஒரு உணவாக அறியப்படுகிறது. ஏனெனில் நிறைவுற்ற கொழுப்பு நண்டு இறைச்சியில் குறைவாக உள்ளது. 
 
5. நண்டு இறைச்சியில் உள்ள செலெனியம், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து தீங்கு விளைவுக்கும் கூறுகளிடம் போராட உதவி நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. 
 
6. நண்டு இறைச்சியில் உள்ள புரதம், ஜின்க் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments