Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள் எது தெரியுமா...?

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:49 IST)
சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன.


யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. போருக்குச் செல்வதற்கு முன்னரும் போருக்குச் சென்று விட்டு வந்த பிறகும் சப்தமாதர்களை வழிபட்டார்கள்.

சப்தமாதர்களில், கெளமாரி, மகேஸ்வரி என தெய்வங்களுக்கு தனித்தனியே ஆலயங்கள் எழுப்பப்பட்டன. பின்னாளில், அடுத்தடுத்த கட்டங்களில், வாராஹிக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு, பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில், தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராஹி தேவிக்கு, பெரியகோயிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான், அதுவும் சமீபத்தில்தான் வாராஹியின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. வராஹியை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள் வாராஹி. வளர்பிறை  பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் வராஹியைத் தரிசிக்கலாம். விளக்கேற்றி வழிபடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(11.11.2024)!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments