Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கரை ஆண்டுகள் ஜெயலலிதா-வை சிறையில் வைத்த பாஜக வினரிடம் மண்டி இடுகிறார் டிடிவி- சீமான் பரபரப்புரை!

J.Durai
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:45 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேனி மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபால்-யை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
 
முன்னதாக உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
இதனை தொடர்ந்து பேசிய சீமான்:
 
இங்கே சிலையாக உள்ள நமது தாத்தாக்களை உற்று நோக்குங்கள், தன்னலமற்று போராடியவர்களை பாருங்கள்.
 
இன்று நான் பேசுவதை அன்றே முத்துராமலிங்க தேவர் பேசினார்.
 
இன்று நீங்கள் பார்க்கும் அனைத்தையும், அன்றே கணித்து சொன்னவர் முத்துராமலிங்க தேவர்,
காற்றை விற்பான், தண்ணீரை விற்பான், என சொன்னார் நடக்கிறது, என் தாத்தா சொன்னதை போன்று இன்று அவர் பேரன் சொல்கிறேன்.
 
நான் சொல்வதும் அனைத்தும் நிச்சயம் நடக்கும்.
வேலை இல்லை என்று சென்றவரை தேர்தலில் நிற்க வைத்து மூக்கையாத்தேவரை முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற வைத்தார்.
 
அதே போல வேட்பாளர் மதன் ஜெயபால் - யை ஜெயிக்க வைக்க வேண்டும்.,
 
முத்துராமலிங்க தேவர் தமிழ்நாடு பார்வட் ப்ளாக் தலைவராக இருந்தார். மூக்கையாத்தேவர் அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் தலைவராக உயர்ந்தார்.
 
கச்சத்தீவை தாரை வார்க்கும் போது கடுமையாக குரல் கொடுத்தார்., இன்று கச்சத்தீவை தாரை வார்க்க காரணமான கட்சியுடனும், நமது இனத்தை கொத்துக் கொத்தாக கொன்ற கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு இன்று தங்கதமிழ்ச்செல்வன் வாக்கு கேட்டு வருகிறார்.
 
பதவிக்காக எதையும் செய்யலாம் என டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். நான்கரை ஆண்டுகள் ஜெயலலிதா வை சிறையில் வைத்தவர்கள் பாஜகவினர் அவர்களிடம் மண்டி இடுகிறார்., இந்த வெற்றியை வைத்து என்ன சாதிக்க போகிறீர்கள்.
 
உங்கள் மீது உள்ள வழக்குகளை வேண்டுமானால் பார்த்துக் கொள்ள முடியும், எங்களை யார் பார்ப்பார்கள்.
 
அதிமுக எதற்கு அந்த கட்சி, இரட்டை இலையில் நின்றவர் குக்கரில் நிற்கிறார், இரட்டை இலையில் நின்றவர் உதயசூரியனில் நிற்கிறார்.
 
இப்போது இரட்டை இலையில் நிற்பவர் அடுத்து எந்த கட்சிக்கு போவார் என தெரியாது, ஆனால் நாங்கள் மாறப்போவது இல்லை.
 
என் தாத்தா மூக்கையாத்தேவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது போல மருத்துவர் மதன் ஜெயபால் - யை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள், எல்லாக் கட்சிகளும் கூட்டு சேர்ந்து கூட்டணியுடன் வருகின்றனர், நாங்கள் தனியாக, மக்களை நம்பி நிற்கிறோம்.
 
இரட்டை இலை இரட்டை இலை என ஓட்டு போடுறீங்களே எதுமே செய்யாத அதிமுக என்ற கட்சி இருந்தா என்ன செத்தா என்ன சொல்லுங்கப்பா.
 
நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் உசிலம்பட்டியில் சட்டக்கல்லூரி மற்றும் மாயக்காள் பெயரில் மகளீர் கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என பேசிவிட்டு மைக் சின்னத்தில் வாக்களிக்க கோரி பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments