Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பாஜக மீது அதிருப்தி இருந்தும் காங்கிரஸ் தோற்றது எப்படி ?

பாஜக மீது அதிருப்தி இருந்தும் காங்கிரஸ் தோற்றது எப்படி ?
, வியாழன், 23 மே 2019 (18:57 IST)
பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தும் பெருவாரியான தொகுதிகளில் காங்கிரஸ் தோற்றிருப்பது என்பது குறித்து கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நீக்கம் என பாஜக ஆட்சியின் தோல்வி திட்டங்கள் மீதும் மக்கள் அதிருப்தியில் இருந்தும் காங்கிரஸ் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என ஊடகங்களும் அரசியல் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருந்தாலும்ம் மாநிலங்களில் அது தனது பலத்தை இழந்து விட்டது. தென் இந்தியாவில்  பாஜக மிகப்பெரிய வெற்றிகளைப் பெறாமலேயே தனிப்பெரும்பாண்மையாக வெற்றி பெற்றுள்ளது என்றால் வட இந்தியா முழுவதும் தன் வெற்றிக்கொடி பறக்க விட்டுள்ளது என்று அர்த்தம். பாஜக தனது கட்சியில் இருந்து வலுவான மாநில தலைவர்களை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் காங்கிரஸில் குறிப்பிடும் படியான மாநிலத் தலைவர்கள் உருவாகவில்லை.

அதனால் மாநிலக் கட்சிகளோடு கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் சில தவறானக் கூட்டணிகளை வைத்ததால் பாஜக எதிர்ப்பு வாக்குகளை முழுமையாகப் பெற முடியாமல் போனது. உதாரணமாக ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நின்று வென்றுள்ளார். இதன் மூலம் ஒரு இடதுசாரி வேட்பாளரின் வெற்றியைத் தடுத்துள்ளார். இதனால் பெருவாரியான வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி