பங்குச்சந்தை இன்று உண்மையாகவே ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Mahendran
புதன், 15 அக்டோபர் 2025 (10:39 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக காலையில் ஏற்றத்தில் வர்த்தகமானாலும், சில மணி நேரங்களில் மீண்டும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வந்தது. இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை நல்ல ஏற்றத்தை கண்டுள்ள நிலையில், இன்று உண்மையாகவே முழு நாளும் ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 82,470 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதைப் போல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 146 புள்ளிகள் உயர்ந்து 25,292 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, ஹெச்சிஎல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments