சென்னை உட்பட இந்தியாவின் பெருநகரங்களில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த நவம்பர் மாதத்தை தொடர்ந்து, இந்த டிசம்பரிலும் வணிகரீதியான சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு, தற்போது ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரூ.868.50-க்கே தொடர்கிறது.