Publish Date: Sat, 26 Feb 2022 (10:22 IST)
Updated Date: Sat, 26 Feb 2022 (13:10 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து ரூ.3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம், கேரளாவிலும் முட்டை விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்து முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், பிற மண்டலங்களிலும் விலை கடுமையாக குறைந்துவருவதாலும் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதன்படி கடந்த 18 ஆம் தேதி முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 23 ஆம் தேதி 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.05 காசுகளாக விலை குறைக்கப்பட்டது. நேற்று மாலை மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.