Publish Date: Sat, 06 Nov 2021 (08:33 IST)
Updated Date: Sat, 06 Nov 2021 (09:18 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் புரட்டாசி மற்றும் தசரா பண்டிகையும் இணைந்து வந்ததால் முட்டை கொள்முதல் விலை குறைந்தது. இதன் பின்னர் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.4.35 விலை ஆனது.
இதனைத்தொடர்ந்து தற்போது நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை 10 காசு உயர்ந்து ரூ.4.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.