Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வாங்க சரியான நேரம்.. 3 நாட்களில் 3 ஆயிரம் குறைந்த தங்கத்தின் விலை...

Advertiesment
today gold price
சில மாதங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை தாண்டி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 13 ஆயிரம் வரை சென்றது. எனவே இனிமேல் சாமானியர்கள் தங்கம் வாங்க முடியுமா என்கிற கேள்வி எழுந்தது.

தற்போது வரை தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கு கீழே வரவில்லை. அதேநேரம் கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 3 ஆயிரத்திற்கும் மேல் குறைந்துள்ளது. நவம்பர் 12ம் தேதியான இன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் 1,02,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதாவது கிட்டத்தட்ட தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கு வந்துவிட்டது. இது இப்படியே நீடிக்குமா இல்லை நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை மேலும் உயருமா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தங்க விற்பனையாளர்கள் ‘தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரம்.. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 10 ஆண்டுகளில் புற்றுநோய், அல்சைமர் இருக்காது... AI குறித்து ஆந்த்ரோபிக் சிஇஓ கணிப்பு!