Publish Date: Wed, 13 Oct 2021 (16:30 IST)
Updated Date: Wed, 13 Oct 2021 (17:23 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 60,737 புள்ளிகளில் வர்த்தகம்.
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் முன்னதாக 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 60,737 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 18,162 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.