நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்செக்ஸ் சுமார் 900 புள்ளிகள் வரை உயர்ந்தது. கடந்த ஒரு வாரமாக இந்த பங்குச் சந்தையில் நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் ஓரளவு ஈடுகட்டினார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 270 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனையடுத்து 60 ஆயிரத்து 350 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி இருக்கிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் சரிந்து 18029 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் இருக்கும் என்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது