இந்த வாரம் முழுவதுமே கிட்டதட்ட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்து வரும் நிலையில் 62 ஆயிரத்துக்கு மேல் இருந்த சென்சாக்ஸ் இன்று 60 ஆயிரத்திற்கும் கீழே இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 140 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 215 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி இருக்கிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 17947 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ரீதியில் சென்றால் 60 ஆயிரத்துக்கும் சென்செக்ஸ் மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது