Publish Date: Mon, 17 Oct 2022 (09:43 IST)
Updated Date: Mon, 17 Oct 2022 (09:45 IST)
கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தையின் சென்செக்ஸ் உச்சம் சென்றதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஆனால் இந்த வாரம் முதல் நாளே பங்குச் சந்தை சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சற்றுமுன் பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 210 புள்ளிகள் குறைந்து என்ற 57714 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 62 புள்ளிகள் குறைந்து 17122 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் குறைந்த அளவே குறைந்துள்ளதால் இன்று மாலைக்குள் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது