மும்பை பங்கு சந்தை கடந்த வாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில் 60,000க்கும் கீழ் சென்செக்ஸ் குறைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்று வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 450 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 17,800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.