Publish Date: Fri, 01 Dec 2023 (10:38 IST)
Updated Date: Fri, 01 Dec 2023 (10:41 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென பங்குச்சந்தை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 442 புள்ளிகள் உயர்ந்து 67438 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிஃப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 20265 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது
400 புள்ளிகளுக்கு மேல் இன்று சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் பலன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் பங்கு சந்தை இன்னும் உச்சம் செல்லும் என்றும் எனவே முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இருப்பினும் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.