Publish Date: Fri, 01 Dec 2023 (10:29 IST)
Updated Date: Fri, 01 Dec 2023 (10:32 IST)
தங்கம் விலை சமீபத்தில் ஒரு கிராம் 90 ரூபாய் அதிகரிக்க நிலையில் நேற்று ஐந்து ரூபாய் மட்டும் குறைந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5850.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 46800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6320.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50560.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 82.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82500.00 எனவும் விற்பனையாகி வருகிறது