Publish Date: Wed, 13 Dec 2023 (11:25 IST)
Updated Date: Wed, 13 Dec 2023 (11:28 IST)
பங்குச்சந்தை நேற்று காலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் மதியத்திற்கு மேல் திடீரென இறங்கிய நிலையில் இன்றும் பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று சென்செக்ஸ் 295 புள்ளிகள் சரிந்து 69 ஆயிரத்து 256 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
தேசிய பங்கு சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 20,817 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று ஹெச்.டி.எப்சி வங்கி,டிசிஎஸ், இன்போசிஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை சரிவில் உள்ளது என்பதும் ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், டாக்டர் ரெட்டி லேப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது