Publish Date: Fri, 15 Dec 2023 (10:47 IST)
Updated Date: Fri, 15 Dec 2023 (10:49 IST)
நேற்று பங்குச்சந்தை திடீரென உச்சம் சென்ற நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 463 புள்ளிகள் உயர்ந்து 70 ஆயிரத்து 977 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்றே 71,000 என்று மாறவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான லிப்ட் இன்று 141 புள்ளிகள் உயர்ந்து 21,323 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று இன்போசிஸ் உள்பட ஒரு சில பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி, நெஸ்ட்லே, வோடோபோன் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.