Publish Date: Mon, 13 Feb 2023 (09:57 IST)
Updated Date: Mon, 13 Feb 2023 (09:59 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை இறக்கத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சார்ந்து 60 ஆயிரத்து 436 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 80 புள்ளிகள் சார்ந்து 17,780 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் புதிய முதலீட்டாளர்கள் கவனத்துடன் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.