Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் 144 தடை உத்தரவு: தெலங்கானாவில் பரபரப்பு!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:29 IST)
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தன

இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது. இரு கட்சிகளில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது வெளியில் நான்கு அல்லது அதற்கு  மேற்பட்ட நபர்கள் கூட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments