எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்: இம்மாச்சல பிரதேச சபாநாயகர்..!

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (16:01 IST)
இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது!
 
முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியை இழந்து விட்டதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
 
 ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் நேற்று நடந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்து உள்ளார் என்றும் இன்னும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments