Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி உறுதி! – களமிறங்கும் பாஜக!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:04 IST)
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியை பாஜக அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் வட இந்தியாவில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. எனினும் தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

பாஜகவும் பல சிறு கட்சிகளுடன் கூட்டணிக்காக தொடர்ந்து பேசி வந்த நிலையில் தற்போது கூட்டணியை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து 403 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். விரைவில் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கூட்டணிகளை பற்றி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments