Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம் - மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

Webdunia
திங்கள், 7 மே 2018 (16:24 IST)
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என்றும் அவ்வாறு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். 
 
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்திற்கு 4 டி.எம்.சி நீரை தர முடியாது என கர்நாடக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மழை பற்றாக்குறையால் தங்களால் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட முடியாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
அதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு பிரம்மாணப்பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த அனைத்து நடவடிகைக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments