Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.கே.சிவகுமார், சித்தராமையா வீடுகளின் முன்பு அடுத்த முதல்வர் பேனர்: கர்நாடகாவில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (14:41 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் அம்மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது மகன் எனது அப்பா தான் முதல்வர் என கூறினார். 
 
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்ராமையாவும் முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சித்தராமய்யா மற்றும் டி கே சிவகுமார் ஆகிய இருவரது வீடுகளிலும் முன் வருங்கால முதல்வர் என்ற பேனர் வைக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே டெல்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் ஆலோசனை செய்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முதல்வர் பதவி கிடைக்காதவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments