Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போட்டி எங்கே?

Siva
வியாழன், 7 மார்ச் 2024 (08:32 IST)
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் உள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பதும் இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலர் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக காங்கிரஸ் கட்சி இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் அதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களமிறங்கும் தொகுதிகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி இந்த முறை போட்டியிடவில்லை என்று கூறியதை அடுத்து ராகுல் காந்தி அமைதி தொகுதிகள் தான் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. அவர் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

அதேபோல் பிரியங்கா காந்தி புதுச்சேரியில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அல்லது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளிவர தொடங்கி விட்டதை அடுத்து தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments