Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 லட்சம் பாதிப்புகளை தாண்டிய இந்தியா; மாநிலவாரி நிலவரம்!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (09:36 IST)
இந்தியாவில் கடந்த மூன்று நாட்களுக்குள்ளாக புதியதாக 1 லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 14 லட்சம் பாதிப்புகளை தாண்டி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,568 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,75,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,656 பேர் பலியான நிலையில் 2,13,238 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 2,13,723 ஆக உள்ள நிலையில் 3,494 பேர் பலியாகியுள்ளனர். 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,30,606
கர்நாடகா – 96,141
உத்தர பிரதேசம் – 66,988
மேற்கு வங்கம் – 58,718
குஜராத் – 55,822
தெலுங்கானா – 54,059
ராஜஸ்தான் – 35,909
ஹரியானா – 31,332
மத்திய பிரதேசம் – 27,800

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments