தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.82 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் ஒவ்வொரு நாளும் மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருவதால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
தற்போது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தேவை என எய்ம்ஸ் நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு போன்றவற்றால் எந்த பயனும் இல்லை என்றும் முழு ஊரடங்கு நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமென தெரிவித்து வருவதையடுத்து விரைவில் மத்திய அரசு நாடு முழுவதும் முழு படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்பட்டு வருகிறது