Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மோசமான வானிலை - 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (10:23 IST)
மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. 

 
இன்று அதிகாலை பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மழையின் காரணமாக காலை 5:40 மணி முதல் 7 மணி வரை, நகரின் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது.  
 
மோசமான வானிலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆம், டெல்லியில் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
 
விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பல்வேறு விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அண்டை மாநில விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பல விமானங்கள் வந்து சேராததால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் பயணிகளின் விமான நிலையை சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. 
 
மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மணிக்கு 60 - 90 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments