Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – சீனா மோதல்: பீஷ்மா பீரங்கியை எல்லையில் நிறுத்திய இந்தியா!

Webdunia
வியாழன், 25 ஜூன் 2020 (08:29 IST)
இந்தியா – சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் சக்திவாய்ந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளது இந்தியா.

சில நாட்களுக்கு முன்னர் லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தை பேசி தீர்க்க இருநாட்டு ராணுவ தரப்பிலும், அரசு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சில நாட்களாக சீனா தனது ராணுவத்தை எல்லைப்பகுதியில் குவித்து வருவதாக சாட்டிலைட் படங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைக்கு பிறகு எல்லைப்பகுதியிலிருந்து இரு நாட்டு வீரர்களும் பின்வாங்கிய பிறகு சீனா மீண்டும் படைகளை குவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சீனா அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் உள்ளது. சீன படைக்குவிப்புக்கு எதிராக இந்தியா தனது சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளது. எல்லையில் மீண்டும் அத்துமீற முயன்றால் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments