Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

Advertiesment
indigo
விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.16 உயர்ந்துள்ள நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.

500 கி.மீ வரை 375ம், 501 முதல் 1000 கி.மீ வரை ரூ.600-ம், 1001 முதல் 1500 கி.மீ வரை ரூ.1150-ம், 2000 கி.மீ மற்றும் அதற்கு மேல் ரூ.1300-ம், சார்க் நாடுகளுக்கு ரூ.3 ஆயிரமும், தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ.5500-ம், ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்த்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக உலகமெங்கும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. ஈரான் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..