Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொன்று 50 துண்டுகளாக்கிய கணவன்! – ஜார்கண்டில் நடுங்க வைக்கும் சம்பவம்!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (12:32 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் கணவனே மனைவியை கொன்று 50 துண்டுகளாக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள போரியோ பகுதியில் வசித்து வந்தவர் தில்சார் அன்சாரி. இவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிகா பகதினுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபிகா காணாமல் போய்விட்டதாக தில்சார் அன்சாரி சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரூபிகாவின் பெற்றோரும் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அன்சாரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்திலிருந்து நாய் ஒன்று மனித உடல் பாகம் ஒன்றை கவ்வி செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அந்த கட்டிடத்தில் 12 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அது ரூபிகாவின் உடல்பாகங்கள்தான் என தெரிய வந்துள்ளது.

இதனால் அன்சாரி மீது சந்தேகமடைந்து அவரை போலீஸார் தீவிரமாக விசாரித்ததில், தான் ரூபிகாவை கொன்று 50 துண்டுகளாக வெட்டி வீசியதை அன்சாரி ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அன்சாரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபமாக தங்களது துணைகளையே கொன்று கண்டதுண்டமாக வெட்டும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments