Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கூட்டரில் இருந்து விழப்போன மம்தா பானர்ஜி… வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:55 IST)
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று பேட்டரி ஸ்கூட்டரில் பேரணி சென்றார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கப்போவதில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாநில, மத்திய அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில்60 % மாகவும், டீசல் விற்பனையில் 54 % மாகவும் உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பாஜக ஆட்சிக்கு எதிராகக் கருத்துக் கூறிக் கடுமையாகத் தனது விமர்சித்துவரும் நிலையில், இந்தப் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, இன்று பேட்டரி ஸ்கூட்டரில் பேரணி சென்றார். இதுகுறித்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஸ்கூட்டர் ஓட்ட ஆரம்பித்த மம்தா பானர்ஜி முதலில் ஓட்ட முடியாமல் தடுமாறினார். இடையில் அவர் ஸ்கூட்டரில் இருந்து விழுவது போல சாயவும் கூட இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தாங்கி பிடித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments