Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:40 IST)
முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த இடம் இந்தியா தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் முதலீட்டாளர்களிடம் பேசிய, நிர்மலா சீதாராமன், ”முதலாளித்துவத்திற்கு மதிப்பளிக்கும் சூழல் இந்தியாவில் தான் உள்ளது, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் இந்த சூழலிலும் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த இடம் வேறெதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லையென பாஜகவினரை பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments