Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: கொரோனா காரணமா?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:17 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன
 
அந்த வகையில் சற்றுமுன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என்று அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட நாடாளுமன்ற தொடர் தகுந்த பாதுகாப்புடன் கூட்டப்பட்டது என்பதும் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
குளிர்கால கூட்டத்தொடர் நடந்தால் அதில் விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என்ற அறிவிப்பு எதிர்க் கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது
 
குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து அடுத்த ஆண்டு பட்ஜெட்டின் போதுதான் அடுத்ததாக நாடாளுமன்றம் கூடும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments