Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (00:29 IST)
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியன் ரயில்வே அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து கொடுத்து வரும் நிலையில் தற்போது விமானத்தில் இருப்பது போன்றே ரயில்களில் சீட்கள் அமைக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ரயில்களில் விமானத்தின் அனுபவத்தை வழங்க, சதாப்தி ரயில்களில், விமானத்தில் உள்ள இருக்கை போன்ற பல்வேறு வசதிகளை உடைய ரயில்பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுபூதி லக்சரி கோச் என்று அழைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த ரயில் பெட்டிகளுடன் கூடிய ரயில்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது

நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில்பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டால் ரயில் பயணம் என்பது விமானத்திற்கு இணையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments