Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மோடிகள் எல்லாம் திருடர்கள்” என விமர்சித்த ராகுல் இழப்பீடு வழங்கவேண்டும்: ராஞ்சி கோர்ட் சம்மன்

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (11:51 IST)
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், ”மோடிகள் எல்லாம் திருடர்கள்” என விமர்சித்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “மோடிகள் எல்லாம் திருடர்கள்” என விமர்சித்தார்.

ராகுலின் இந்த கருத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த பிரமோத் குமார் என்பவர், ராகுலுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ராகுல் காந்தி மோடி சமுதாயத்தினரை இழிவுபடுத்திவிட்டார் எனவும், அவரின் கருத்து மோடி சமூகத்தினரின் மனதை காயப்படுத்தியுள்ளது எனவும் பிரமோத் குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர், ராகுல் காந்தி தான் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், மேலும் 20 கோடி ரூபாய் இழப்பிடு வழங்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதன் பின்பு ராஞ்சி நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, வருகிற ஜூலை 3 ஆம் தேதி நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

ஆனால் இது குறித்து காங்கிரஸ் ஆதரவாளர்கள், ராகுல் காந்தி, மோடி என்ற தனிநபரையே குறிப்பிட்டார் எனவும், தவிற மோடி என்ற சமூகத்தை அவர் குறிப்பிடவில்லை எனவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments