Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் பள்ளிகள் திறப்பு!

Advertiesment
Schools open in Delhi
டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டம்பரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறது.

 இந்நிலையில், டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 6-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி யூனியர் பிரதேச அரசு கூறியுள்ளதாவது:  டெல்லியில் செப்டம்பர், 1 ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் எனவும்,  செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசி போடவில்லை என்றால் ரூ.15000