Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

Advertiesment
Sleep Divorce

Prasanth Karthick

, செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:29 IST)

இந்தியாவில் திருமணமான பிறகும் அதிகமான தம்பதிகள் இரவில் தனித்தனியாகவே தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில், குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகளவில் உள்ளது. சமீபமாக காதல் செய்து திருமணம் செய்யும் தம்பதிகள் கூட சில ஆண்டுகளில் விவாகரத்து பெறும் சூழல் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் பெரும்பாலான தம்பதிகள் இரவில் ஒன்றாக உறங்குவதில்லை என தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் கணவன், மனைவி இருவரும் தனியே தூங்க விரும்பும் இந்த ஸ்லீப் டைவர்ஸ் பழக்கத்தை 70 சதவிதம் பேர் விரும்புவதாக தெரியவந்துள்ளது.

 

பெரும்பாலும் தற்போதைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் இரவு இனிமையான தூக்கத்தை பெரிதும் விரும்புகின்றனர். மேலும் குறட்டை விடுவது, இருவருக்கும் இடையேயான மாறுபட்ட பணி நேரம் ஆகியவற்றால் பிறருக்கு ஏற்படும் தொந்தரவை தவிர்க்கவும் இம்முடிவை பலர் எடுப்பதாக தெரிய வந்துள்ளது.

 

ஆனால் இதுபோன்ற ஸ்லீப்பிங் டைவர்ஸ் போன்றவை தம்பதியினர் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தலாம் என குடும்ப உறவு ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!