Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

Siva
வெள்ளி, 9 மே 2025 (07:16 IST)
ஜம்மு & காஷ்மீர் உள்பட சில மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் ஏவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய பாதுகாப்புப் படைகள் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாகவும், எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 
ஆபரேஷன் சிந்தூர் என்ற குறியீட்டு பெயரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அனைத்தும் இந்திய பாதுகாப்புப் படைகளால்  இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
 
இந்த சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மூன்று மாநிலங்களிலும் உச்சக்கட்ட பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும், எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments