Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஐடி எண் இருக்கும்.. ஆனா எதுவும் போலி வாக்காளர் அட்டை இல்லை! - தேர்தல் ஆணையம் விளக்கம்!

Prasanth Karthick
திங்கள், 3 மார்ச் 2025 (11:57 IST)

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் போலி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

 

இந்திய குடிமக்களுக்கு வாக்களிக்க உரிமை தரும் வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அட்டைகளில் வெவ்வேறு வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் போலி வாக்காளர்களை சேர்த்து பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வெவ்வேறு வாக்காளர்கள் ஒரே வாக்காளர் அடையாள எண்ணை பெற்றிருப்பதால் அதில் ஒன்று போலி என பொருள் அல்ல. வாக்காளர் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்கள் பெயர், பிறந்த தேதி, பேரவைத் தொகுதிகள் உள்ளிட்டவை மாறுபடும். ஒரே தொகுதியில் இருவருக்கு ஒரே வாக்காளர் அடையாள எண் இருக்காது என விளக்கம் அளித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments