Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்ட் அருகே ரயில் விபத்து.. ஹவுரா - மும்பை ரயிலில் பயணம் செய்தவர்கள் என்ன ஆனார்கள்?

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (07:21 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை சென்ற ரயில் திடீரென ஜார்கண்ட் சக்ரதார்பூர் என்ற பகுதியில் சென்ற போது ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதற்கட்ட விசாரணையில் ஆறு பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதை அடுத்து அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் சிலர் லேசான காயங்கள் அடைந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஹவுரா - மும்பை விரைவு ரயில் ஜார்கண்ட் அருகே விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று பயணிகளை காப்பாற்றி வருவதாகவும் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் வைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீட்பு பணியினார் விரைந்து சென்று விசாரணை செய்து வருவதாகவும் ரயில் விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களாக அடிக்கடி ரயில் விபத்து நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஜார்கண்ட் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments