Publish Date: Tue, 06 Oct 2026 (18:01 IST)
Updated Date: Tue, 06 Oct 2026 (18:04 IST)
ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஆந்திராவிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
திருப்பதிக்கு சென்று வழிபடுவது என்பது பலருக்கும் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கிறது. சில நேரங்களில் ஒரு நாள் கூட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்நிலையில் திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. அதேபோல் அக்டோபர் 12 ,13, 14 மற்றும் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய
https://ttdevasthanams.ap.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை 10 மணிக்கு முன் பதிவு தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க