Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 கோடி லட்டு, 100 கோடி துட்டு – பாக்ஸ் அபீஸ் ஹிட் அடித்த திருப்பதி

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (11:26 IST)
கடந்த மாதம் மட்டும் திருப்பதி கோவிலில் உண்டியல் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. ஒரு மாதத்தில் இவ்வளவு வசூலாகியிருப்பதில் குஷியில் இருக்கிறது தேவஸ்தானம்.

கடந்த ஜூன் மாதம் வழக்கத்திற்கு மாறாக திருப்பதியில் அதிகளவு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் ஹோட்டல்கள், மடாலயங்கள் எல்லாம் நிரம்பி சாலைகளில் காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. அவ்வளவு பேரும் ஏழுமலையானை நாட்கணக்காக காத்திருந்து வழிப்பட்டு சென்றனர்.

 

தற்போது போன மாத உண்டியல் வசூலை எண்ணும் பணி தொடங்கியது. பக்தர்கள் தங்க, வெள்ளி காசுகள், ரொக்க பணங்கள் முதலியவற்றை காணிக்கையாக உண்டியலில் போடுவார்கள். ஜூன் மாதம் இதுபோல் பெறப்பட்ட காணிக்கைகள் மொத்தமாக 100 கோடியே 37 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளதாம். போன வருடம் ஜூன் மாத வசூலோடு ஒப்பிட்டால் 9 கோடி ரூபாய்க்கு அதிகம் வசூல் ஆகியுள்ளது.

 

அதுபோல போன ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 95 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 கோடியே 13 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments