Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணன், தம்பி அடுத்தடுத்து சாவு.. குடும்பத்தை கொன்ற பாம்பு? – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:11 IST)
உத்தர பிரதேசத்தில் பாம்பு கடித்து இறந்த அண்ணனை பார்க்க சென்ற தம்பியையும் பாம்பு கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பவானிப்பூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா. இவர் கடந்த செவ்வாய் கிழமையன்று பாம்பு கடித்ததால் பலியானார். அவரது இறுதி சடங்குகளில் பவானிப்பூர் கிராமத்தில் நடைபெற்றது.

இதற்காக வெளியூரில் இருந்த அரவிந்தின் தம்பி கோவிந்த் மிஸ்ரா சொந்த ஊருக்கு வந்துள்ளார். இறுதி காரியங்கள் முடிந்து கோவிந்த் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரையும் பாம்பு கடித்தது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர் சந்திரசேகர் என்பவரையும் பாம்பு கடித்துள்ளது. ஆனால் நல்வாய்ப்பாக அவர் பிழைத்துக் கொண்டுள்ளார். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை அடுத்தடுத்து பாம்பு கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வான்வெளி தடை: சுற்றி செல்லும் விமானங்கள்.. கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு..!

”திரும்ப காஷ்மீருக்கே போங்க?” காஷ்மீர் மாணவர்களை தாக்கி அச்சுறுத்தும் வட மாநிலத்தவர்கள்!

பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: 2வது நாளாக இறங்கிய பங்குச்சந்தை.. !

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

பாகிஸ்தானியர்களும் பன்றிகளும் உள்ளே நுழைய கூடாது: இந்தூரில் வைக்கப்பட்ட போர்டு..

அடுத்த கட்டுரையில்
Show comments